உள்ளூர் செய்திகள்

புதிதாக கழிப்பறை கட்டுவதற்கு எதிர்ப்பு

Published On 2023-08-27 08:53 GMT   |   Update On 2023-08-27 08:53 GMT
  • ஸ்ரீரங்கம் உத்தர வீதிகளில் புதிதாக கழிப்பறை கட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது
  • மாநகராட்சி ஆணையரிடம் ஸ்ரீரங்கம் நகர நல சங்கத்தினர் மனு அளித்தனர்

திருச்சி,

ஸ்ரீரங்கம் நகர நல சங்க தலைவர் சுரேஷ் வெங்கடாசலம் திருச்சி மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்தி நாதனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.அதில் அவர் கூறியிருப்பதாவது;-ஸ்ரீரங்கம் உத்திர வீதிகளில் ஏற்கனவே கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் 3 பொதுக் கழிப்பறைகள் உள்ளன. இந்த நிலையில் கீழ் உத்தர வீதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் வேதாந்த தேசிகர் சன்னதி அருகில் புதிதாக ஒரு கழிப்பறையும், வடக்கு உத்தர வீதியில் ஸ்ரீ ராமானுஜ ஐயர் மடத்திற்கு எதிரில் மற்றொரு பொது கழிப்பறையும் மாநகராட்சி நிர்வாகத்தால் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிய வருகிறது.இதனால் 4 உத்தர வீதிகளில் வசிக்கும் மக்களும் மிகுந்த அதிருப்திக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளனர்.இந்த வீதிகளில் ஸ்ரீரங்கம் நம் பெருமாள் வீதி உலா நடைபெற்று வருகிறது.பழமையான மடங்கள் ஆச்சாரியார்களின் சன்னதிகள், பாடசாலைகள் உள்ளன.உத்தரவீதிகளில் கழிவுநீர் வெளியேற்ற பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவில்லை.இதனால் மழைக்காலங்களில் சுகாதார கேடு ஏற்படுகிறது. இந்த நிலையில் புதிதாக 2 கழிப்பறைகளை உத்தர வீதிகளில் கட்டினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சாலையின் அகலம் குறைந்து போக்குவரத்திற்கும் தை தேரோட்டத்திற்கும் திருவிழாக்களுக்கும் மிகுந்த இடையூறு ஏற்படும். ஏற்கனவே உத்தர வீதிகளில் கழிப்பறைகள் அமைக்க நீதிமன்ற தடை உத்தரவு பெற்றுள்ளோம்ஆகவே கோவிலுக்கு சொந்தமான மாற்று இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பறை கட்டினால் நல்லது.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News