உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டையில் இருந்து திருச்சி வந்த முதியவர் மாயம்
- புதுக்கோட்டையில் இருந்து திருச்சி வந்த முதியவர் மாயமானார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவரை தேடி வருகின்றனர்.
திருச்சி:
புதுக்கோட்டை குடிமியான்மலை கைவேலி பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கையா (வயது 75 ). இவருக்கு சமீப காலமாக மனரீதியான பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது மகன் சின்னையா திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்வதாக புறப்பட்டு வந்த தங்கையா திடீரென மாயமானார். இது குறித்து அவரது மகன் சின்னையா கண்டோன்மென்ட் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவரை தேடி வருகின்றனர்.