- சிறுகனூர் அருகே கார் மோதி முதியவர் பலியானார்
- நிற்காமல் சென்ற காரைச் செக் போஸ்டில் வைத்து போலீசார் மடக்கினார்கள்
மண்ணச்சநல்லூர்,
மணச்சநல்லூர் தாலுக்கா வாழையூர் அரிஜன தெருவை சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் மகன் முருகேசன் வயது(65) சிறுகனூரில் உள்ள பாரில் கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று நேற்று இரவு 9.45 மணி அளவில் வேலை முடிந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் அருகே ரெட்டி மாங்குடி பிரிவு இரும்பு தடுப்புச் சுவரைத் தாண்டி ரோட்டை கடக்க முயன்ற போது அப்போது சென்னையில் பழனி நோக்கி சென்ற கார் ஒன்று முருகேசன் மீது இடித்துவிட்டு நிற்காமல் சென்று விட்டது. முதியவர் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தடம் மாறி மாறி சென்ற தப்பி சென்ற காரை லால்குடி வட்டம் கல்லகம் பகுதியில் உள்ள செக் போஸ்டில் வைத்து போலீசார் காரை மடக்கினர்கள். பாண்டிச்சேரி வீரபத்திரன் என்பவரது மகன் அய்யனார் என்பது தெரியவந்தது. அவர் மீது சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.