உள்ளூர் செய்திகள்

திருச்சி கல்லக்குடியில் ஜல்லிகட்டு-வாடிவாசலில் இருந்து 744 காளைகள் சீறிப்பாய்ந்தன

Published On 2023-03-02 08:03 GMT   |   Update On 2023-03-02 08:03 GMT
  • திருச்சி கல்லக்குடியில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து 744 காளைகள் சீறிப்பாய்ந்தன
  • காளைகளை அடக்குவதற்காக 375 பேர் களத்தில் இறங்கினர்.

டால்மியாபுரம்:

திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. போட்டியினை லால்குடி கோட்டாட்சியர் வைத்தி யநாதன் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்று போட்டியினை துவக்கி வைத்தார். திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 744 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்ந்து விடப்பட்டது. காளைகளை அடக்குவதற்காக 375 பேர் களத்தில் இறங்கினர். இவர்களில் 51 பேருக்கு காளைகள் முட்டியதில் காயம் ஏற்பட்டது.

அனை வருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் 5 பேர் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.விழாவில் வட்டாட்சியர் செசிலினா சுகந்தி துணைதாசில்தார் சங்கரநாராயணன், பேரூராட்சி தலைவர் பால் துரை, செயல் அலுவலர் குணசேகரன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கருணாநிதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். லால்குடி டி.எஸ்.பி. அஜய் தங்கம் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


Tags:    

Similar News