உள்ளூர் செய்திகள்

தொட்டியம் அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

Published On 2022-08-28 15:19 IST   |   Update On 2022-08-28 15:19:00 IST
  • உடையாகுளம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைப்பெற்றது.
  • ஆசிரியர்கள் தியாகராஜன் வனஜா ஜெயராமன் ஆகியோர் போதை பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர்

திருச்சி :

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியம் உடையாகுளம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைப்பெற்றது.

கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் க.சண்முகம் தலைமை வகித்தார். ஆசிரியர் மனோகர் வரவேற்றார். ஆசிரியர்கள் தியாகராஜன் வனஜா ஜெயராமன் ஆகியோர் போதை பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர்.

பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வரங்கம் பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் பன்னீர்செல்வம் உறுப்பினர்கள் சக்திவேல் ரவிக்குமார் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்து மாணவர்களிடமும் பொதுமக்களடையும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இல்லம் தேடி கல்வியில் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ள பெற்றோர்களுக்குஅறிவுறுத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள் நூலக புத்தகத்தை பயன்படுத்துவது குறித்தும் வாசிப்புத்தலன் மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

முடிவில் ஆய்வக உதவியாளர் பழனியப்பன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News