உள்ளூர் செய்திகள்
- 10-ம் வகுப்பு மாணவி மாயமானார்
- வீட்டில் இருந்து வெளியே சென்றவர்
திருச்சி:
திருச்சி விமான நிலையம் பகுதியில் உள்ள பாண்டியன் தெருவில் வசித்து வருபவர் ஜமால் முஹம்மது (வயது58). அவரது மகள் மெஹராஜ் பானு (18) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை ஜமால் முகமது விமான நிலைய காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.