உள்ளூர் செய்திகள்

திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-24 13:45 IST   |   Update On 2023-08-24 13:45:00 IST
  • திருச்சி மாநகர் தள்ளுவண்டி தரைக்கடை மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
  • திருச்சி மாநகராட்சி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருச்சி,

சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கெடுத்த, புகைப்படம் எடுத்த வியாபாரிகளுக்கு விற்பனை நடைபெறும் இடத்தின் முகவரியுடன் அடையாள அட்டை வழங்கிட வேண்டும். நகர விற்பனை குழுவில் இரண்டு பங்கு இடங்களை சாலையோர வியாபாரிகளுக்கு ஒதுக்கிடு செய்ய கோரியும்,சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டம் 2014 குறித்து அரசு அதிகாரிகள் காவல் துறையினருக்கு முறையான பயிற்சி அளித்திட வேண்டும். அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகளை வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி வட்டியில்லா கடனாக ரூ.15,000-த்தை கூட்டுறவு வங்கி மூலம் உண்மையான தரைக்கடை , தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் செல்வி மற்றும் திருச்சி மாநகர் தள்ளுவண்டி தரைக்கடை மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News