உள்ளூர் செய்திகள்

அரிவாளை காட்டி ரூ.37½ லட்சம் பறிப்பு

Published On 2023-09-14 08:57 GMT   |   Update On 2023-09-14 08:57 GMT
  • மளிகைக்கடை ஊழியரிடம் அரிவாளை காட்டி ரூ.37½ லட்சம் பறிப்பு
  • பெண் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 திருச்சி,

திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் மளிகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் கிருஷ்ணகுமார் (வயது 56). இவர் கடையில் வியாபாரத்தின் மூலம் வசூலான பணத்தை வங்கியில் கட்டுவதற்காக ஒரு பையில் ரூ.37 லட்சத்து 50 ஆயிரத்தை வைத்து கொண்டு நேற்று முன்தினம் பகல் 12 மணி அளவில் காந்தி மார்க்கெட்டில் இருந்து ஆட்டோவில் ஜங்ஷன் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்ம ஆசாமிகள் 2 பேர் அரிவாளை காட்டி மிரட்டியதால் பதற்றம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி சென்றார்.பின்னர் தலைமை தபால் நிலையம் அருகில் கிருஷ்ணகுமாரிடம் இருந்த பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து கடையின் உரிமையாளர் கண்டோ ன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறா ர்கள். முதற்கட்ட விசார ணையில் திருச்சி வரகனேரி மற்றும் அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த இரண்டு ரவுடிகளுக்கு தொடர்பு இரு ப்பது தெரியவந்துள்ளது.தலைமறைவான ரவுடிகளை பிடிக்க போலீஸ் படை விரைந்துள்ளது. இதற்கிடையில் ரவுடிகளிடம் தொடர்பில் இருந்த பெண் உள்பட 3 பேரை கண்டோன்மெண்ட் பிரிவு போலீசார் மடக்கி பிடித்து துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர் .விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News