உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தொட்டியத்தில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-28 13:17 IST   |   Update On 2022-12-28 13:17:00 IST
  • தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தொட்டியத்தில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
  • பல்வேறு 14 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்

தொட்டியம்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் அரசு மருத்துவமனை ஊழியர்கள், ஊராட்சி ஒன்றிய சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் மருத்துவமனை வளாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநிலம் தழுவிய அனைத்து மாநில அரசு அலுவலக முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சத்தியவாணி, அரசு ஊழியர் தொட்டியம் வட்டக் கிளை தலைவர் மணிவண்ணன் மற்றும் வட்டக்கிளை சக்திவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழக அரசின் பள்ளிக் குழந்தைகளின் காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்திட வேண்டும், அரசு துறையில் காலியாக உள்ள 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், 21 மாத ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் மற்றும் பல்வேறு 14 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதில் எதிர்கால இயக்கப் பணியாக வரும் ஜனவரி 9 முதல் 27ம் தேதி வரை ஊழியர் சந்திப்பு, உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் பிப்ரவரி 10ம் தேதி, மாவட்ட அளவிலான கோரிக்கை பேரணி மார்ச் 28ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கோட்டை முற்றுகை உள்பட எதிர்கால இயக்கம் பணிகள் குறித்து பேசப்பட்டது. இதில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News