வெளிநாட்டில் வேலை பார்ப்பவர் வீட்டில் நகை, பணம் திருட்டு
- வெளிநாட்டில் வேலை பார்ப்பவர் வீட்டில் நகை, பணம் திருட்டு போயின.
- உறவினர் இல்ல திருமணத்துக்கு சென்றிருந்தார்
திருச்சி:
திருச்சி லால்குடி கணபதி நகர் கபிரியேல் புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர் அரபு நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி திவ்யபாரதி மற்றும் குழந்தைகள் கபிரியேல் புரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திவ்யபாரதி வீட்டை பூட்டிவிட்டுவழுதியூரில் உள்ள தனது உறவினர் இல்ல திருமணத்துக்கு சென்றார். பின்னர் இரு தினங்கள் கழித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 3.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15,000 ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து திவ்யா பாரதி லால்குடி போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருட்டு நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கி வருகின்றனர்.