ஹோட்டல் தகராறில் பீர் பாட்டில் தாக்குதல்
- முசிறி அருகே ஹோட்டல் தகராறில் பீர் பாட்டில் ஒருவர் தாக்கப்பட்டார்
- முசிறி போலீஸார் மூவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
முசிறி,
முசிறி அருகே ஹோட்டலில் நேரிட்ட தகராறில் ஒருவரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் மீது முசிறி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முசிறி அருகேயுள்ள வீரமணிபட்டி சேர்ந்த பழனிமுத்து மகன் முருகேசன் (40), இவருக்கும் பேரூரரை சேர்ந்த கனகராஜ் மகன் நந்தகுமார் (26) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முருகேசன் தண்டலைபுத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் நின்று கொண்டிருந்தபோது, நந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் ஆனந்த் (35) சுந்தரவேல் (26) ஆகியோர் முருகேசனிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாகவும், அப்போது முருகேசனை நந்தகுமார் தனது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தாக்கியதில் முருகேசன் தலையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் முசிறி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முசிறி போலீசாரிடம் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீஸார் நந்தகுமார், ஆனந்த், சுந்தரவேல் ஆகிய மூவர் மீது வழக்கு பதிந்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.