உள்ளூர் செய்திகள்
ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு சாவு
- ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- குடும்ப செலவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு
திருச்சி,
திருச்சி பீமநகர் விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் இப்ராகிம். இவரது மகன் உபயதுல்லா (41).ஆட்டோ டிரைவர். இவரது வீட்டில் குடும்பச் செலவுகள் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த உபயதுல்லா வீட்டு உத்திரத்தில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி குருசியா பானு கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்ஸ்ஸ் கோர்ட் போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டர் குமாரவேல் வழக்குப்பதிவு சாரணை நடத்தி வருகிறார் .உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.