உள்ளூர் செய்திகள்

திருச்சியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு நாள் ஒன்றுக்கு ரூ. 1 கோடி நிலுவை வரி வசூல்

Published On 2022-08-08 10:04 GMT   |   Update On 2022-08-08 10:04 GMT
  • திருச்சி மாநகராட்சி திருத்தப்பட்ட சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை, சேவை கட்டணங்கள் போன்றவற்றின் மூலம் கடந்த 8 நாட்கள் தினமும் ரூ.8 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டி உள்ளது.
  • கடந்த மாதம் முதல் வரி வரி செலுத்தாமல் இருந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இரண்டு லட்சம் எச்சரிக்கை நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

திருச்சி :

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் வரி நிலுவை மற்றும் திருத்தப்பட்ட சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை, சேவை கட்டணங்கள் போன்றவற்றின் மூலம் கடந்த 8 நாட்கள் தினமும் ரூ.8 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டி உள்ளது.

இந்த மாநகராட்சியை பொருத்தமட்டில் சொத்து வரியின் மூலமாக மட்டும் வருடத்திற்கு ரூ.138.90 கோடி எட்டுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் வரி நிலுவைத் தொகை ரூ.100 கோடிக்கு மேல் உயர்ந்து விட்டதால் மாநகராட்சி பராமரிப்பு மற்றும் திட்ட பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.

திருச்சி மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டு மேயர் மற்றும் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் வரி வரி செலுத்தாமல் இருந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இரண்டு லட்சம் எச்சரிக்கை நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

அதன் பிறகு ஜூலை 29-ந்தேதி முதல் இந்த மாதம் 5-ந்தேதி வரை சொத்து வரி, மாநகராட்சி கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் மற்றும் சேவை கட்டணங்கள் மூலம் ரூ.8 கோடி அளவுக்கு வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு திருத்தப்பட்ட வரி உயர்வும் ஒரு காரணியாகஉள்ளது.

மாநகராட்சி கட்டிடங்களை வாடகைக்கு எடுப்பவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் மாதாந்திர வாடகையை உயர்த்த தற்போது மாநகராட்சி நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.

இது உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் வளர்ச்சியை மேம்படுத்தும். கிழக்கு புலிவார் ரோடு பகுதியில் வரி நிலுவை வைத்துள்ள காரணத்துக்காக ஒரு தியேட்டர் சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News