உள்ளூர் செய்திகள்

முசிறி அரசு பள்ளியில் பயின்று அரசு பணியில் உள்ள முன்னாள் மாணவிகளுக்கு சாதனையாளர் விருது

Published On 2023-01-08 13:03 IST   |   Update On 2023-01-08 13:03:00 IST
  • முசிறி அரசு பள்ளியில் பயின்று அரசு பணியில் உள்ள முன்னாள் மாணவிகளுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
  • மேலும் 2021 - 2022 ம் ஆண்டு 10,11 மற்றும் 12 ம் வகுப்பில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது

முசிறி:

முசிறி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து மருத்துவம், கல்வித்துறை, வேளாண் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் முன்னாள் மாணவிகள் 35 பேருக்கு சாதனையாளர்கள் விருந்தினை முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன், முசிறி கோட்டாட்சியர் மாதவன் ஆகியோர் பங்கேற்று வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் 2021 - 2022 ம் ஆண்டு 10,11 மற்றும் 12 ம் வகுப்பில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது, இதனை தொடர்ந்து பள்ளியில் ஆசிரியர்களுக்களுக்கு பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவை வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் மகாலட்சுமி குணசேகரன் உலக தமிழ் சங்க செயலாளர் நித்யானந்தம், புரவலர் ரகுநாதன் மூலமாக விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக பள்ளியின முதுகலை ஆசிரியர் புஷ்பராஜ் வரவேற்றார், இந்நிகழ்ச்சியினை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை வாணிஸ்ரீ ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் முசிறி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாலா ராமச்சந்திரன், முசிறி நகராட்சி தலைவர் கலைச்செல்வி சிவகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர். முடிவில் பேராசிரியை ரங்கநாயகி அணைவருக்கும் நன்றி தெரிவித்தார்.





Tags:    

Similar News