- திருச்சியில் வெவ்வேறு இடங்களில் குழந்தைகள் உள்பட 5 பேர் மாயமாகி உள்ளனர்
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி செப் 13 -
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனி யை சேர்ந்தவர் செல்ல க்குட்டி ( வயது 79). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவி ல்லை. இதுகுறித்து அவரது மகன் சத்திய செல்வன் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் எடமலைப் பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதேபோல் திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த காளிதாஸ் (வயது 75) என்பவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறி த்து அவரது மகன் முத்து ச்செல்வம் கொடுத்த புகா ரின் அடிப்படையில் எடம லை ப்பட்டிபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை நேதாஜி தெரு தங்கராஜ் காலனியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி அனிதா (வயது 35). இவர்களுக்கு லெனின் (5), ஜஸ்வின் (3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இரண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற அனிதா வீடு திரும்பவில்லை. இது குறித்து குமார் பொன் மலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.