உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற 5 பேர் கைது

Published On 2023-08-27 14:26 IST   |   Update On 2023-08-27 14:26:00 IST
  • திருச்சியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
  • ஏர்போர்ட் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை

 திருச்சி,

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக ஏர்போர்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ராகுல்( வயது 21) என்பவரையும்,திருவரங்கம் குஜிலியம் தோப்பு பகுதியில் கஞ்சா விற்ற மதன் குமார் (22),ராமச்சந்திரன் (19) என்பவரையும், தி காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்ற வரகனேரி ராவுத்தர் சந்து பகுதியை சேர்ந்த கண்ணன் (32)என்பவரையும். திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்ற கூனி பஜாரை சேர்ந்த குருமூர்த்தி (வயது 23) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News