மணப்பாறை,ஸ்ரீரங்கம் பகுதிகளில் 3 இளம் பெண்கள் திடீர் மாயம்
- மணப்பாறை,ஸ்ரீரங்கம் பகுதிகளில் 3 இளம் பெண்கள் திடீர் மாயமானர்
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
திருச்சி:
ஸ்ரீரங்கம் பூங்குடி பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் பொன்மணி பாரதி (வயது 24) பி. எஸ்.சி. நர்சிங் முடித்துள்ளார்.இந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அவர் வேலைக்காக தனது தோழியை பார்க்கப் போவதாக கூறிச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.ஆனால் எந்த தகவலும் கிடைக்காத காரணத்தால் ராம்ஜி நகர் போலீசில் சுப்பிரமணி புகார் செய்தார்.அதில் மாயமான தனது மகளை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதேபோன்று புத்தாநத்தம் காவல் நிலைய பகுதியில் எம் எஸ்.சி.முடித்த ஒரு இளம் பெண் காதலுடன் ஓட்டம் பிடித்துள்ளார். மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் வடக்கு இடையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சௌந்தர்யா (24)எம். எஸ்.சி. பட்டதாரியான இவர் புத்தாநத்தம் பகுதியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இது தொடர்பாக ரவி புத்தாநத்தம் போலீசில் புகார் செய்தார்.விசாரணையில் சௌந்தர்யா காதல் வலையில் விழுந்திருப்பது தெரியவந்தது. மருங்காபுரி கருஞ்சோலைப்பட்டி பகுதியை சேர்ந்த ரஞ்சித் (25 )என்ற வாலிபருடன் சௌந்தர்யா ஓட்டம் பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.மேலும் இன்னொரு சம்பவத்தில் தாத்தா வீட்டுக்குச் சென்ற இளம் பெண் மாயமாகியுள்ளார்.மருங்காபுரி பழைய பாளையம் அழகாபுரி பகுதியைச் சேர்ந்தவர் அழகன். இவரது மகள் மீனா ரோஷினி( 20)இவர் வேம்பன் ஊரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. மீனா ரோஷினியும் காதல் வயப்பட்டு வாலிபருடன் ஓட்டம் பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.