உள்ளூர் செய்திகள்

வீரர்களுக்கு அஞ்சலி

Published On 2023-02-15 15:19 IST   |   Update On 2023-02-15 15:19:00 IST
  • வீரர்களுக்கு 4-ம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அரூர் கச்சேரிமேட்டில் நடைபெற்றது.
  • டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் தலைமை வகித்தார்.

அரூர்,

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 4-ம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அரூர் கச்சேரிமேட்டில் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் .வீரர்களின் திருவுருவ படங்களுக்கு வருவாய் மற்றும் காவல் துறையினர் மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதில், சி.ஆர்.பி.எப். வீரர் பச்சையப்பன், வட்டாட்சியர் பெருமாள், காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு, தொண்டு நிறுவன களப்பணியாளர் சாலா, ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் உள்ளி ட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News