உள்ளூர் செய்திகள்

ஜே.ஜே.குட்வின் நினைவிடத்தில் அஞ்சலி

Published On 2023-01-16 14:10 IST   |   Update On 2023-01-16 14:10:00 IST
  • பிராா்த்தனை நடைபெற்றது.
  • பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஊட்டி,

சுவாமி விவேகானந்தரின் சுருக்கெழுத்தாளரான ஜே.ஜே.குட்வின் நினைவிடம் ஊட்டி புனித தாமஸ் தேவாலயத்தில் உள்ளது. அவரது நினைவிடத்தில் தனியாா் தொண்டு நிறுவனம் மற்றும் ராமகிருஷ்ண மடம் சாா்பில் பிராா்த்தனை மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட ஊட்டி ராமகிருஷ்ண மடம் சுவாமி பரகீா்த்தமானந்தா மகராஜ் பேசுகையில், சுவாமி விவேகானந்தரின் வாா்த்தைகள் உலகுக்குக் கிடைக்க ஜே.ஜே. குட்வின் பணி மிகவும் முக்கியமானதாகும். இளைய சமூகத்தின் ஒழுக்கமான வாழ்க்கைக்கும், மனவலிமை மிக்க தெளிவான சிந்தனைக்கும் விவேகானந்தரின் வாா்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றாா்.

இதில் அருட்தந்தை இமானுவேல் வேளவேந்தா், பிரிக்ஸ் பள்ளி மாணவ, மாணவியா், ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News