உள்ளூர் செய்திகள்

பொது நல அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்திய போது எடுத்த படம்

பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த வீரருக்கு நெல்லையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

Published On 2023-01-17 09:15 GMT   |   Update On 2023-01-17 09:15 GMT
  • நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் மூன்று சுற்றில் பல்வேறு மாடுகளை அடக்கி சிறந்த வீரராக வலம் வந்த நிலையில் 4-வது சுற்றில் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
  • சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று நெல்லை பொது நல அமைப்புகள் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நெல்லை:

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்தவர் அரவிந்தராஜ். இவர் நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் மூன்று சுற்றில் பல்வேறு மாடுகளை அடக்கி சிறந்த வீரராக வலம் வந்த நிலையில் 4-வது சுற்றில் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று நெல்லை பொது நல அமைப்புகள் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த அமைப்பை சேர்ந்த அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழர் விடுதலைக் களம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார், வக்கீல்கள் மணிகண்டன், பிரபு ஜீவன் மற்றும் மகேஷ், மாரி, பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News