போச்சம்பள்ளி அருகே உள்ள தொப்படிகுப்பம் பகுதியில் தேனீக்கள் கொட்டியதில் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள்.
தேனீக்கள் கொட்டிய 10 பேருக்கு சிகிச்சை
- சிறுவர்கள் கல்லை கொண்டு தேன் கூடுகள் மீது வீசியுள்ளனர்.
- பத்திற்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் அருகேயுள்ள தொப்படிகுப்பம் கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவரது வீட்டின் முன்பு பழமையான புளியமரம் இருந்துள்ளது.
இந்த புளியமரத்தில் கடந்த சில மாதங்களாக தேனீக்கள் கூடுகட்டி வசித்து வந்துள்ளது. இந்த தேனீ கூடுகள் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் கல்லை கொண்டு தேன் கூடுகள் மீது வீசியுள்ளனர்.
இதில் கூடுகள் கலைந்து பறக்க ஆரம்பித்த தேனீக்கள் அருகிலிருந்தவர்களை கொட்ட ஆரம்பித்தது. இதில் முனுசாமி மற்றும் அவர்களது குடும்பத்தாரை கடித்துள்ளது.
இதில் படுகாயடைந்த நான்கு பேரும் அலறியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அவர்களை காப்பாற்ற வந்த முதியவர் மகேந்திரன் என்பவரையும் தேனீக்கள் கடித்தன. பின்னர் அருகே இருந்த பத்திற்கும் மேற்பட்டோரையும் கடித்தன.
இதில் காயடைந்த அனைவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு இருசக்கர வாகனங்களில் போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சந்தூர் அருகே பத்திற்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.