உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவ, மாணவியை பள்ளி தாளாளர்,முதல்வர் பாராட்டிய காட்சி.


வில்வித்தை போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை

Published On 2022-12-02 14:24 IST   |   Update On 2022-12-02 14:24:00 IST
  • ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த ஜமால் ஜகேரியா, ரசினா ரீஜா மாநில அளவிலான வில் வித்தை போட்டியில் கலந்து கொண்டனர்.
  • ரசினா ரீஜா 2-ம் இடமும், ஜமால் ஜக்கேரியா 3-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.

தென்காசி:

செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் ஜமால் ஜகேரியா மற்றும் மாணவி ரசினா ரீஜா தமிழ்நாடு யூத் பீல்டு ஆர்ச்சரி அசோசியேஷன் நடத்திய வில் வித்தை போட்டியில் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவி ரசினா ரீஜா மாநில அளவில் 2-ம் இடமும், மாணவன் ஜமால் ஜக்கேரியா 3-ம் இடமும் பிடித்து வெற்றி பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியை பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News