உள்ளூர் செய்திகள்

தலை கவசம் அணியாமல் பயணித்த வாகன ஓட்டிகள் உறுதிமொழி ஏற்கவைப்பு

Published On 2023-01-09 15:59 IST   |   Update On 2023-01-09 15:59:00 IST
  • விதிமுறைகளை மதிக்காமலும், ஹெல்மெட் அணியாமலும் செல்வது வாடிக்கையாக உள்ளது.
  • பாதுகாப்பாக சாலையில் பயணிப்போம் என அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்தனர்.

ஓசூர்,

ஓசூர் பகுதிகளில் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமலும், ஹெல்மெட் அணியாமலும் செல்வது வாடிக்கையாக உள்ளது.

இதனை தடுக்கும் வகையிலும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நேற்று, ஓசூர் போக்குவரத்து போலீசார் சாலைகளில் ஹெல்மெட் போடாமல் சென்ற 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்தனர்.

பின்னர் அவர்களை ஓரிடத்தில் நிற்க வைத்து ஹெல்மெட் போடாமல் சாலைகளில் செல்ல மாட்டோம், போக்குவரத்து விதிமுறைகளை மதித்து நடப்போம், 3 பேர் இருசக்கர வாகனத்தில் செல்ல மாட்டோம், அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை இயக்கி செல்ல மாட்டோம், போலீசார் வாகன சோதனை செய்யும் போது ஒத்துழைப்பை கொடுப்போம், பிறருக்கு இடையூறு செய்யாமல் பாதுகாப்பாக சாலையில் பயணிப்போம் என அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்தனர்.

ஹெல்மெட் போடாமல் போலீசாரிடம் சிக்கிய இளைஞர்களிடம் ஹெல்மெட் வாங்கி வந்து அணிந்த பின்னரே விடுவிப்போம் என்று போலீசார் கண்டிப்புடன் கூறியதால் அனைவரும் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று ஹெல்மெட் வாங்கி வந்து போலீசாரிடம் காண்பித்து அணிந்து அதன் பின்னர் அங்கிருந்து தங்களது இருசக்கர வாகனங்களில் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News