உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அங்கக சான்று குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

Published On 2022-08-24 09:28 GMT   |   Update On 2022-08-24 09:28 GMT
  • இயற்கையான உரங்களை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றியும் எடுத்து கூறினார்.
  • பொது இ-சேவை மையத்திற்கு ஆதார் எண்ணுடன் நேரடியாக சென்று புதுபித்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொண்டார்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை அருகே, ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டதின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு அங்கக சான்று குறித்த ஒரு நாள் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது கூறுகையில் இப்பயிற்சி பயன் படுத்தி அங்கக சான்று பற்றியும் விதைகளை எவ்வாறு தேர்வு செய்வது, இயற்க்கையான உரங்களை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றியும் எடுத்து கூறினார்.

மேலும் இப்பகுதியிலுள்ள பிரதம மந்திரியின் கௌரவ நிதி ஆண்டுக்கு ரூ.6000 பெறும் விவசாயிகள் தங்களுடைய பதிவை அருகிலுள்ள பொது இ-சேவை மையத்திற்கு ஆதார் எண்ணுடன் நேரடியாக சென்று புதுபித்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொண்டார்.

துணை வேளாண்மை அலுவலர் பிரபாகரன், அனைவரையும் வரவேற்றார்.

இப்பயிற்சியில் முன்னோடி விவசாயி த.அருணஜெடேசன் கலந்து கொண்டு பாரம்பரிய நெல் ரகங்களை எவ்வாறு சாகுபடி செய்யலாம் என்பது பற்றியும் அதன் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

இப்பயிற்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலை வகித்தார்.

அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் அட்மா திட்டங்கள் பற்றியும், உழவன் செயலி பற்றியும் இப்பயிற்சியில் விளக்கி கூறினார்.

இப்பயிற்சியை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய் மற்றும் மதுமினா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நிகழ்ச்சி முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News