உள்ளூர் செய்திகள்

பயிற்சி நடந்தபோது எடுத்தபடம்.

கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கு பயிற்சி

Published On 2022-09-21 09:18 GMT   |   Update On 2022-09-21 09:18 GMT
  • கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு வளர் இளம் பெண்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
  • வளர் இளம்பெண்களான மாணவிகளுக்கு வரகு பாயாசம், சாமை புட்டு, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், பொரி மிட்டாய், சோள பணியாரம் போன்ற சத்தான உணவுகள் வழங்கப்பட்டது.

கல்லிடைக்குறிச்சி:

கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு வளர் இளம் பெண்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் இவாஞ்சலின் பால்ராஜ் தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜாஸ்மின், யோகா மாஸ்டர் மாரியப்பன், கவுன்சிலர் பிரமாட்சி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தமிழாசிரியர் ஐசக் வெற்றி செல்வன் வரவேற்புரை ஆற்றினார். அம்பை தீயணைப்புப் படை நிலைய அலுவலர் பலவேசம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஆரோக்கியம், ஊட்டச்சத்து, உணவின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

நிகழ்ச்சியில் திட்ட அலுவலர்கள் காந்திமதி, ஜெஸி, சரஸ்வதி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வளர் இளம்பெண்களான மாணவிகளுக்கு வரகு பாயாசம், சாமை புட்டு, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், பொரி மிட்டாய், சோள பணியாரம் போன்ற சத்தான உணவுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News