உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி ஊழியர்கள் சங்க மாநில மாநாடு நடந்தபோது எடுத்தபடம்.


குற்றாலத்தில் பேரூராட்சி ஊழியர்கள் சங்க மாநில மாநாடு

Published On 2022-06-26 08:22 GMT   |   Update On 2022-06-26 08:22 GMT
  • அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வரவேற்புக் குழு தலைவர் துரைசிங் தலைமை தாங்கினார்.
  • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

தென்காசி:

தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்க 4-வது மாநில மாநாடு தென்காசி மாவட்டம் குற்றாலம் காசிமேஜர்புரத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வரவேற்புக் குழு தலைவர் துரைசிங் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கனகராஜ் செயலாளர் அறிக்கையையும், மாநில பொருளாளர் பாலமுருகன் பொருளாளர் அறிக்கை வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் செல்வம் சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன், மாநில துணைத்தலைவர் கிறிஸ்டோபர், நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்க மாநில பொருளாளர் முருகான ந்தம் வாழ்த்திப் பேசினார்.

தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாநில செயலாளர் மகாலிங்கம் அமைப்பு விதிகள் திருத்தத்தை முன்மொழிந்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசு நிறைவுரை ஆற்றினார்.

மாநில பொதுச் செயலாளர் கனகராஜ் தீர்மானங்கள் விளக்க உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் அல்லாபிச்சை நன்றி கூறினார்.

மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக பேரூராட்சி களுக்கு இணையான மக்கள்தொகை மற்றும் வருவாய் கொண்டுள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகள் ஆக தரம் உயர்நிலைக்குழு அமைத்திட வேண்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்களை மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து பேரூராட்சி ஊழியர்களும் கோசங்களை எழுப்பி எழுந்து நின்று முன்மொழிந்தனர். மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News