உள்ளூர் செய்திகள்

செயற்கை நீரூற்றின் அருகே படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

புதுப்பொலிவு பெற்ற நட்சத்திர ஏரி செயற்கை நீரூற்றை அருகில் சென்று ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

Published On 2023-05-08 11:08 IST   |   Update On 2023-05-08 11:08:00 IST
  • ஏரியின் நடுவே 3 இடங்களில் வைத்திருக்கக்கூடிய செயற்கை நீரூற்று சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
  • சுற்றுலாப்பயணிகள் தண்ணீரில் நடந்தே செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி யான கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத்தல மாகும். கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்திட முக்கிய பங்கு வகிப்பது இங்குள்ள சுற்றுலா த்தலங்களும், சீதோஷ்ண நிலையும் தான். கொடைக்கானலுக்கென்று தனி அடையாளமாக இருப்பது நகரின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியாகும்.

தற்போது நட்சத்திர ஏரியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக ஏரியின் நடுவே 3 இடங்களில் வைத்திருக்கக்கூடிய செயற்கை நீரூற்று சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார் அறிவுறு த்தலின்படி நகராட்சி சார்பில் இந்த செயற்கை நீரூற்று நிறுவப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏரியை ச்சுற்றி பல்வேறு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. செயற்கை நீரூற்றுடன் செல்பி எடுத்தும் படகு சவாரியின் போது செயற்கை நீரூற்று அருகே சென்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

மேலும் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்வது சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் கொடைக்கானல் நகராட்சி சார்பாக படகு குழாம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. படகுகளும் புதிதாக வாங்கப்பட்டு செய ல்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் சுற்றுலாப்பயணிகள் தண்ணீரில் நடந்தே செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் படகில் சவாரி செய்யும் இடம் வரை ஏரித்தண்ணீரில் நடை மேடையும் அமைக்கப்பட்டு ள்ளது. கொடைக்கானலில்

இது போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதால் நட்சத்திர ஏரி புதுப்பொலிவு பெற்று வருகிறது.

Tags:    

Similar News