உள்ளூர் செய்திகள்

குன்னூரில் பிளாஸ்டிக் பொருள் கொண்டு வந்த சுற்றுலா பயணிக்கு அபராதம்

Published On 2023-07-17 09:23 GMT   |   Update On 2023-07-17 09:23 GMT
  • நீலகிரியில் 19 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது
  • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 19 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனை கண்காணிக்கும் வகையில் அரசு அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை சாலையில் வந்த ஒரு சுற்றுலா வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள், டம்ளர்கள், உணவு தட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.இதையடுத்து அந்த பொருட்களை கொண்டு வந்த சுற்றுலா பயணிக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. அதன்பிறகு நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News