உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-06-28 13:18 IST   |   Update On 2022-06-28 13:18:00 IST
  • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வீரபாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
  • வீரபாண்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- வீரபாண்டி துணைமின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை வீரபாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பார்க் காலேஜ் ரோடு, லட்சுமிநகர் நால்ரோடு, கரைபுதூர் ரோடு, கோட்டைக்காடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

இதேபோல் பணப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட மாதேஸ்வரன் நகர், நல்லூர்பாளையம், கவுண்டம்பாளையம், கவுண்டம்பாளையம்புதூர், மலையம்மன்பாளையம், கிருஷ்ணாபுரம், சிட்கோ.

திருப்பூர் துணைமின்நிலையத்திற்குட்பட்ட சி.எஸ்.ஐ. சர்ச் வீதி, இந்திராநகர், இட்டேரி ரோடு, போஸ்டல் காலனி, திரு.வி.க. நகர் 1,2,3 வீதிகள் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News