உள்ளூர் செய்திகள்

புதியம்புத்தூரில் தக்காளி அமோக விளைச்சல்

Published On 2023-01-22 07:08 GMT   |   Update On 2023-01-22 07:08 GMT
  • புதியம்புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டு இருந்தனர்.
  • தற்சமயம் இந்த காய்கனி கமிஷன் மண்டிகளுக்கு 25 கிலோ எடையுள்ள தக்காளி பெட்டிகள் 200-க்கு குறையாமல் விற்பனைக்கு வருகின்றன.

புதியம்புத்தூர்:

புதியம்புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டு இருந்தனர். அது தற்சமயம் விளைச்சலுக்கு வந்துள்ளது.

புதியம்புத்தூரில் காய்கறி களை விற்பனை செய்து தர 5 கமிஷன்மண்டிகள் உள்ளன. இந்த கமிஷன் மண்டிகளில் சுற்றுவட்டார விவசாயிகள் தக்காளி மற்றும் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

தினமும் இரவு 8 மணிக்கு அவை ஏலம் விட்டு விற்பனை செய்வது வழக்கம். தூத்துக்குடி மார்க்கெட்டி ற்கு விற்பனை செய்வோரும் புதியம்புத்தூரில் சில்லறை கடை விற்பனையாளர்களும் இந்த காய்கறி ஏலத்தில் கலந்து கொண்டு காய்களை வாங்கி செல்வார்கள்.

காய்கறி தரத்தை பொறுத்து அவை ஏலம் போகும். தற்சமயம் இந்த காய்கனி கமிஷன் மண்டிகளுக்கு 25 கிலோ எடையுள்ள தக்காளி பெட்டிகள் 200-க்கு குறையாமல் விற்பனைக்கு வருகின்றன. நேற்று இரவு நடந்த காய்கறி ஏலத்தில் தக்காளி கிலோ ரூ.28-க்கு விலை போனது.

இந்த விலை கட்டுபடி யாகுமா என தக்காளி சாகுபடியாளர்களிடம் கேட்டபோது, இந்த விலைக்கு ஏலம் போனால் விவசாயிக்கு ஓரளவு லாபம் கிடைக்கும் என்றனர். மேலும் புதியம்புத்தூரில் விளையும் தக்காளி பெங்களூர் தக்காளி போல் அல்லாமல் நாட்டு தக்காளி போல் சமையலுக்கு ருசியை தரும் என விவசாயிகள் தெரிவித்தனர்

Tags:    

Similar News