உள்ளூர் செய்திகள்

வ.உ.சி. மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தது

Published On 2022-07-01 15:15 IST   |   Update On 2022-07-01 15:15:00 IST

ஈரோடு:

ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. தினமும் 10 முதல் 12 டன் தக்காளி லோடு வந்தது.

இந்நிலையில் சமீபகா லமாக தக்காளி விலை கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்பனையானது.

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு மீண்டும் வரத்து குறைய தொடங்கியது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக மீண்டும் தக்காளி அதிக அளவில் வரத்தாகி வருகிறது. இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் தக்காளி அதிகளவில் விற்பனைக்கு வந்தது.

இன்று தாளவாடி, சத்தியமங்கலம், ஆந்திரா பகுதியில் இருந்து 25 டன் தக்காளி வந்தது. இதனால் தக்காளி விலை கிடுகிடு என குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News