உள்ளூர் செய்திகள்

ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாணவர்கள் புகாரால் பள்ளி வளாகத்தில் கழிப்பிட வசதி

Published On 2022-07-07 15:41 IST   |   Update On 2022-07-07 15:41:00 IST
  • பள்ளியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் கழிவறை உள்ளதால் அங்கு செல்ல பெரும் சிரமமாக இருக்கிறது.பள்ளியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் கழிவறை உள்ளதால் அங்கு செல்ல பெரும் சிரமமாக இருக்கிறது.
  • பள்ளி வளாகத்தில் உள்ள ஒதுக்குப் புறமான பகுதியில் கழிப்பிடம் கட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அரவேனு:

கோத்தகிரி அரவேனு தும்பூர் ஆரம்ப அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடந்த 28-ந் தேதி நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு வந்து மனு கொடுத்தனர்.

பள்ளியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் கழிவறை உள்ளதால் அங்கு செல்ல பெரும் சிரமமாக இருப்பதாகவும், அந்த கழிவறையில் அட்டைப்பூச்சி, வனவி லங்குகள் புகுந்து விடுவதால் மிகவும் பாதிக்கப்ப ட்டு உள்ளதாகவும், எனவே பள்ளி வளாகத்தில் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் மனுவில் கூறியிரு ந்தனர். இதைத் தொடர்ந்து சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தும்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தார். அப்போது கிராம மக்களில் சிலர் கோவிலுக்கு அருகில் பள்ளி அமைந்துள்ளதால், அங்கு கழிப்பிடம் கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதற்கு சப்-கலெக்டர் கோவிலுக்கு அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கு கழிப்பிடங்களும் கட்ட ப்பட்டுள்ள நிலையில், பள்ளி வளாகத்தில் குழந்தைகள் நலன் கருதி கழிப்பிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என அறிவுறுத்தினார். பள்ளி வளாகத்தில் உள்ள ஒதுக்குப் புறமான பகுதியில் கழிப்பிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதற்கான திட்ட மதிப்பீட்டை விரைவில் தனக்கு அனுப்பி வைக்குமாறும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆய்வின் போது கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால், வருவாய் ஆய்வாளர் தீபக், ஜக்கனாரை ஊராட்சி செயலர் மூர்த்தி உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News