உள்ளூர் செய்திகள்

வெள்ளைப்பூண்டு கொடி பற்றி அறியலாம்: மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகை முற்றம் நிகழ்ச்சி - இன்று மாலை நடக்கிறது

Published On 2022-09-03 09:33 GMT   |   Update On 2022-09-03 09:33 GMT
  • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூலிகைகள் மற்றும் அதன் மகத்துவம், பயன்படுத்தும் முறைகள், பங்கேற்பவர்களுக்கு ஏற்படும் பொதுவான மூலிகைகள் குறித்த சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
  • இந்த மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று வெள்ளைப்பூண்டு கொடி மூலிகை பற்றிய விளக்கங்களை பார்வையாளர்கள் கேட்டு பெறலாம்.

நெல்லை:

நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் பாபநாசம் உலக தமிழ் மருத்துவ கழகம் இணைந்து நடத்தும் மூலிகை முற்றம் 2.0 என்ற மூலிகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3-வது சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.

இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூலிகைகள் மற்றும் அதன் மகத்துவம், பயன்படுத்தும் முறைகள், பங்கேற்பவர்களுக்கு ஏற்படும் பொதுவான மூலிகைகள் குறித்த சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று வெள்ளைப்பூண்டு கொடி மூலிகை பற்றிய விளக்கங்களை பார்வையாளர்கள் கேட்டு பெறலாம்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இலவசமாக மூலிகை கன்றுகள் வழங்கப்படுகிறது.

எனவே இதில் அனைவரும் பங்கேற்று பயன்பெற வேண்டும் என அறிவியல் மைய அலுவலர் எஸ்.எம்.குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் விபரங்களுக்கு 94429 94797 என்ற எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News