உள்ளூர் செய்திகள்

சாலையில் செடிகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலையில் செடிகளை நட்டு கிராம மக்கள் போராட்டம்

Published On 2022-10-31 13:55 IST   |   Update On 2022-10-31 13:55:00 IST
  • நிசாலை சீரமைக்க ஒதுக்கப் பட்ட நிதியை கையாடல் செய்து, சாலை முழுமை பெற்று விட்டதாக எழுத்து பூர்வமாக அதி காரிகள் பதில் கூறினார்கள்.
  • நிதியை கையா டல் செய்த அதிகாரிகள் மீது முறையான நடவடி க்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

புதுச்சேரி:

காரைக்காலில் போடப்ப படாத சாலைக்கு ரூ.43.27 லட்சம் செலவு கணக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் காட்டப்பட்ட தால், நிதி மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி, கிராம மக்கள் சாலையில் செடிகளை நட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால் அம்மன் கோவில் பத்து பகுதியில் சுமார் 125 குடும்பங்களும், எம்.எம்.ஜி நகரில் 155 குடும்பங்களும், பறவை பேட்டில் 26 குடும்பங்களும் உள்ளன. இப்பகுதி சாலை கள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்ததின் பேரில், கடந்த 2018-ம் ஆண்டு, 3 பகுதியையும் ஒருங்கிணைத்து, ஆதி திரா விடர் நலத்துறை சார்பில், ரூ.43.27 லட்சம் செலவில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்ப ட்டது.

ஆனால், 26 வீடுகள் உள்ள பறவைபேட் பகுதி யில் மட்டும் சாலை சீரமை க்கப்பட்டது. கோரிக்கை விடுத்து 4 ஆண்டுகள் ஆகியும் சாலை சீரமைக்க ப்படாததால், எம்.ஜி.ஆர். நகரைச்சேர்ந்த பூங்கொடி என்பவர், காரைக்கால் பொதுப்பணி த்துறை, நகராட்சி மற்றும் ஆதிதிரா விடர் நலத்து றைக்கு, சாலையை சீரமைப்பு குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் கேட்டார்.

இதில், பொதுப்பணி த்துறை, நகராட்சி தங்க ளுக்கு சம்பந்த மில்லை யென பதில் கூறிய நிலையில், ஆதிதிராவிட நலத்துறை மட்டும் 2018-ல் ரூ.43.27 லட்சத்தில் சாலை போடப்பட்டுவிட்டது என பதில் அளித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இது குறித்து புகார் மனு அளித்தனர்.

அதில் சரியான பதில் வராத காரணத்தால், கிராம மக்கள் தங்கள் பகுதி சாலையில், செடிகளை நட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின் போது, சாலை சீரமைக்க ஒதுக்கப் பட்ட நிதியை கையாடல் செய்து, சாலை முழுமை பெற்று விட்டதாக எழுத்து பூர்வமாக பதில் கூறிய அதி காரிகள், நிதியை கையா டல் செய்த அதிகாரிகள் மீது முறையான நடவடி க்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

இல்லையேல், தொடர் போராட்டம் நடத்துவோம் என வலியுறுத்தியுள்ளனர். இச்சமவம் நடிகர் வடிவேலுவின் கிணற்றை காணோம் என்ற புகார் நகைச்சுவை ஞாபகம்படுத்துவதாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் நகைத்து வருகின்றனர்.

Tags:    

Similar News