உள்ளூர் செய்திகள்

தேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்:கடலூர் கலெக்டர் தகவல்

Published On 2023-08-19 08:52 GMT   |   Update On 2023-08-19 08:52 GMT
  • 18 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்பிக்கடைசி நாள் 31.8.2023 ஆகும்.

கடலூர்:

கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - தேசிய குழந்தைகள் விருது 2023-ற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது அறிவிக்கப்பட்டு 18 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதிய கண்டுபிடிப்பு , கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரத்தீர செயல் புரிந்த தனி தகுதிப்படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக (பால் புரஷ்கார் )எனும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகியவற்றை கொண்டதாகும். இவ்விருதுக்கான தகுதியுடையோர் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற முறைகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்பிக்கடைசி நாள் 31.8.2023 ஆகும். இறுதி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News