உள்ளூர் செய்திகள்

கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் நிர்வாகிகள் மரக்கன்று வழங்கினர்.

திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி குழும தாளாளர் பிறந்தநாள் விழா

Published On 2022-11-20 09:43 GMT   |   Update On 2022-11-20 09:43 GMT
  • மர நடுவோம் மழை பெறுவோம் என்ற வாசகத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற முழுக்கமிட்டு இந்த விழிப்புணர்வு பேரணி துவங்கியது.
  • மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவாரூர்:

திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி குழுமத்தின் தாளாளர் வெங்கடராஜூலு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முதல் நிகழ்வாக மரம் நடுவோம் மழை பெறுவோம் என்ற வாசகம் ஏற்ப 500 மரக்கன்று களை கல்லூரி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மர நடுவோம் மழை பெறுவோம் என்ற வாசகத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் பிளாஸ்டி க்கை ஒழிப்போம் என்ற முழுக்கமிட்டு இந்த விழிப்புணர்வு பேரணி துவங்கியது.

இதில் கல்லூரியின் செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் மேம், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் முனைவர் சிவக்குமார் மற்றும் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி முதல்வர்கள் துணை முதல்வர்கள் துறை தலைவர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News