உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

Published On 2022-07-17 14:17 IST   |   Update On 2022-07-17 14:17:00 IST
  • காதலன் திருமணம் செய்யாததால் விரக்தி
  • போலீசார் விசாரணை

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள கல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் மௌனிகா (வயது 19).

இவர் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தனியார் ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார். கல்லூரி படிப்பு படித்த போது வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இரு வீட்டில் பேசி திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் வாலிபர் தனது அக்காவின் திருமணம் முடிந்தபின், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என தாமதம் செய்து வந்தார்.

கடந்த 13-ந் தேதி வாலிபர் வீட்டுக்கு சென்ற மௌனிகா திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். ஆனால் அவர் மறுத்து தனது அக்காவின் திருமணம் முடிந்தபின் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து மெளனிகா விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

பின்னர் மௌனிகாவை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்துவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக மௌனிகாவின் தாயார் சாந்தி கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News