உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த வீடு, போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

திருவண்ணாமலையில் ரூ.14 லட்சம் நகை திருட்டு

Published On 2023-04-27 13:01 IST   |   Update On 2023-04-27 13:01:00 IST
  • கொள்ளை கும்பலை பிடிக்க கேமராக்கள் ஆய்வு
  • பீரோ உடைத்து துணிகரம்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தாலுகா துர்க்கை நம்மியந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன், விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவில் அவரது வீட்டில் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு மர்ம கும்பல் நுழைந்துள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 33 பவுன் நகை, 200 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை திருடிவிட்டு தப்பினர்.

நேற்று அதிகாலை மாடியில் இருந்து இறங்கி வந்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆனந்தன் அதிர்ச்சி அடைந்தார். பீரோவை பார்த்தபோது அதில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து அவர் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் நேரில் வந்து சோதனை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர். திருடப்பட்ட நகை,பணத்தின் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News