விபத்துக்குள்ளான லாரி
லாரி புளிய மரத்தில் மோதி தீ பற்றியது
- பொதுமக்கள் தீயை அணைத்தனர்.
- டிரைவர் படுகாயம்
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அருகே கடலாடி ஏரிக்கரையோரம் உள்ள புளிய மரத்தில் கால்நடைத் தீவனம் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதி தீ விபத்து ஏற்பட்டு டிரைவர் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரியில் இருந்து செங்கம் செல்லும் நெடுஞ்சாலையில் கால்நடை தீவனம் ஏற்றிவந்த லாரியை போளூர் அடுத்த பொத்தரை கிராமத்தைச் சேர்ந்த பரணிதரன் (வயது 29) என்பவர் நேற்று ஒட்டி வந்தார்.
அப்போது கலசப்பாக்கம் அருகே கடலாடி ஏரிக்கரையோரம் உள்ள புளிய மரத்தில் கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தின் மீது அதிவேகத்தில் மோதியது.
இதுபற்றி தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து ஏற்படுத்திய லாரியை ஜேசிபி எந்திரம் மூலம் மீட்டு லாரியை வெளியே எடுத்தனர்.
பின்னர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த டிரைவர் பரணிதரனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சிக்கிய லாரி தீப்பிடிக்க தொடங்கியதால் கடலாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
மேலும் தீ பரவாமல் இருக்க தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து விரைந்து வந்த தீயணைப்பு படை தீயை கட்டுப்படுத்தி பெரும் விபத்து நடக்காமல் தடுத்தனர்.
மேலும் விபத்து ஏற்பட்டதை விசாரிக்க போளூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர்.