உள்ளூர் செய்திகள்

சித்தப்பாவை சுட்டு கொன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2023-01-24 10:09 GMT   |   Update On 2023-01-24 10:09 GMT
  • ஜெயிலில் அடைப்பு
  • போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை

போளூர்:

ஜமுனாமுத்தூர் அடுத்த மந்தைவெளி கொட்டாய் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 22) ஏழுமலை முன் விரோதத்தால் தன் சித்தப்பாவை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஏழுமலையை குண்டர் சட்டத்தில் ைது செய்ய கலெக்டர் முருகேஷிடம் பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில் ஏழுமலையை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் ஏழுமலையை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

போளூர் போலீசார் 17-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த காரை மடக்கிய சோதனையை மேற்கொண்டனர். அப்போது காரில் 5 பேர் 2 கிலோ கஞ்சாவை கடத்தியது தெரிய வந்தது.

இதில் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான போளூர் சின்னப்பா தெருவை சேர்ந்த பாலகுமரனை (32) குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் கலெக்டர் முருகேஷ் உத்தரவின்படி போலீசார் பாலகுமரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.

Tags:    

Similar News