உள்ளூர் செய்திகள்

இளைஞர் திறன் திருவிழாவில் தேர்வு செய்யப்பட்ட மாணவிக்கு பயிற்சிக்கான சான்றிதழை ஒ.ஜோதி எம்எல்ஏ வழங்கிய போது எடுத்த படம்.

அனைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கி வளர்ச்சி பெற்ற தமிழகம் உருவாக முதல்-அமைச்சர் பாடுபட்டு வருகிறார்

Published On 2022-11-10 15:24 IST   |   Update On 2022-11-10 15:24:00 IST
  • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பேச்சு
  • இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது

செய்யாறு:

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவண்ணாமலை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திட்ட இயக்குனர் சையத் சுலைமான் தலைமை வகித்தார்.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், செய்யாறு ஒன்றிய குழு தலைவர் என்.வி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக ஓ. ஜோதி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசியதாவது, தமிழக அரசு தமிழக முழுவதும் உள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்த மாணவ மாணவிகளின் திறனை அறிந்து பல்வேறு நிறுவனங்கள் மூலம் 3 மாதம் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பினை உருவாக்குகிறது.

பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்று நீங்கள் அனைவரும் வேலை வாய்ப்பினை பெற வேண்டும். தமிழக முழுவதும் இளைஞர்கள்அ னைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கி வளர்ச்சி பெற்ற தமிழகம் உருவாக நம்முடைய முதல்-அமைச்சர் பாடுபட்டு வருகிறார்.

இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள், மகளிர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அசோக், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், கோபால கிருஷ்ணன், வழக்கறிஞர் பாஷா, நகர மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கார்த்திகேயன், கங்காதரன், திமுக இளைஞரணி துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News