உள்ளூர் செய்திகள்
- தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஜடேரி பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 24). இவரது நண்பர் மணிகண்டன்.
இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் நோக்கி நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திருப்பனங்காடு கிராமம் அருகே வந்த போது எதிரே வந்த தனியார் பஸ் விஜய் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் விஜய் மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த அவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.