உள்ளூர் செய்திகள்

பள்ளி வகுப்பறையில் கலெக்டர் ஆய்வு செய்த காட்சி.

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வாய்ப்பாடு தெரியவில்லை

Published On 2023-03-03 09:30 GMT   |   Update On 2023-03-03 09:30 GMT
  • ஆசிரியர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
  • மதிய உணவு தரமாக உள்ளதா என ஆய்வு

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மருசூர் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 156 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை உட்பட 6 ஆசிரியர் ஆசிரியை பணிபுரிந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தச்சூர், வேலப்பாடி, அரையாளம், ஆரணி டவுன், உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மருசூர் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது 3ம் வகுப்பறைக்குச் சென்ற முருகேஷ் 6-வது வாய்ப்பாடு தெரியுமா என்று கேட்டார். அதற்கு மாணவ மாணவிகள் அனைவரும் தெரியாது என்று கையை உயர்த்தி பதிலளித்தனர். இதனால் கலெக்டர் அதிர்ச்சியடைந்தார்.

இதனையொடுத்து வகுப்பறைக்கு சென்ற கலெக்டர் 10-ம் வாய்ப்பாடு தெரியுமா என்று கேட்டதற்கு மாணவ மாணவிகள் தெரியாது என்று பதில் அளித்தனர். இதைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களை அழைத்து மாணவர்களுக்கு ஏற்றாற் போல் பாடத்தை நடத்தி புரிய வைக்க வேண்டும் என்று கலெக்டர் கண்டித்தார்.

அடுத்த முறை நான் பள்ளிக்கு வரும் போது மாணவ மாணவிகள் அனைவரும் 1-ம் வாய்ப்பாடு முதல் 12-ம் வாய்ப்பாடு வரை மாணவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

சத்துணவு கூடத்திற்கு சென்று மாணவ மாணவிகளுக்கு வழங்கபட்டு வரும் மதிய உணவை தரமாக உள்ளதா என உணவை உண்டு ஆய்வு செய்தார். 

Tags:    

Similar News