உள்ளூர் செய்திகள்

படவேடு கோட்டை மலை வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி உற்சவம்

Published On 2022-09-25 14:19 IST   |   Update On 2022-09-25 14:19:00 IST
  • 47-ம் ஆண்டு திருவிழா தொடங்கியது
  • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஜவ்வாதுமலை ராஜகம்பிரம் (எ) கோட்டை மலையில் ராஜகம்பிர சம்புவராய மன்னரால் 2160 அடி உயர மலையில் கட்டப்பட்ட ஸ்ரீவேணுகோபாலசாமி கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை 47-ம் ஆண்டு உற்சவ திருவிழா நேற்று தொடங்கியது.

இதைமுன்னிட்டு கோவிலில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.அதிகாலை 4 மணி அளவில் கோவில் திறக்கப்பட்டு, அபிஷேகம், ஆராதனை பஜனைகள் நடைபெற்றது. இக்கோயிலுக்கு தரையிலிருந்து மலைப்பாதை வழியாக பக்தர்கள் செல்ல டிராக்டர் மூலமும், மலையடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு சென்றனர்.

மேலும் தரிசனத்துக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உற்சவர் அலங்காரம் செய்து கோவில் உட்பிரகார உலாவும் மாலையில் படவேடு பகுதியில் திருவீதி உலாவும் நடந்தது. நேற்று சாமிக்கு சீனிவாசர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 2-வது சனிக்கிழமை வருகிற அக்டோபர் 1ம்தேதி நர்ததன கிருஷ்ண அலங்காரம், 8ம்தேதி வைகுண்டநாதன் அலங்காரம், 15-ம்தேதி நாச்சியார் திருக்கோல அலங்காரம், 22-ம்தேதி வெண்ணைத் தாழி அலங்காரம் செய்யப்படுகிறது.

மேலும் விழாவின் போது அதிகாலை சூரிய ஒளி மூலவர் மீது படுமாறு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை படைவீடு கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News