சாலை மறியல் ஈடுபட்டபோது எடுத்த படம்.
- சாலை வசதி வேண்டி வலியுறுத்தல்
- போலீசார் பேச்சு வார்த்தை
செங்கம்:
செங்கம் அருகே சாலை வசதி கேட்டு நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சாலை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் செங்கம் கிளையூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கம் அடுத்த பரமனந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர், தீபம் நகர், ஜீவா நகர், எம்ஜிஆர் நகர், பாரியூர் உள்ளிட்ட ஐந்து கிராமங்களுக்கு சுமார் 20 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாமல் அடிப்படை தேவைகளுக்கு கூட விரைந்து செல்ல முடியாத சூழல் நிலவி வருவதாகவும் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஓட்டுக்காக மட்டும் தங்களிடம் உடனடியாக தார் சாலை அமைத்து தருவோம் என உறுதி அளித்து இதுவரையிலும் எந்த உள்ளாட்சி பிரதிநிதிகளும் தங்களிடம் வரவில்லை என குற்றம் சாட்டிய கிராம மக்கள் செங்கம்-கிளையூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.