உள்ளூர் செய்திகள்

போளூர் சர்க்கரை ஆலை முன்பு பா.ம.க. ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-21 10:14 GMT   |   Update On 2022-12-21 10:14 GMT
  • ரூ.26 கோடி பாக்கி தொகையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தல்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

போளூர்:

போளூர் அடுத்த கரைப்பூண்டியில் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய ரூ.26 கோடியை வழங்க கோரி நேற்று ஆலை முன்பாக பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பாமக வடக்கு மாவட்ட செயலாளர் வேலாயுதம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் கோபி, கே.சி.குமரன், பாலமூர்த்தி, விஜயன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் மீ.கா செல்வகுமார் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏழுமலை, கணேசன், பொதுக்குழு உறுப்பினர் கலைமணி மாவட்டத் தலைவர் ஏழுமலை உள்பட பலர் கலந்த கொண்டனர்..

கரும்பு நிலுவை பாக்கி ரூபாய் 26 கோடியே வட்டியுடன் வழங்க கோரியும், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி உடனடியாக வழங்கக் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

முடிவில் ஒன்றிய செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News