உள்ளூர் செய்திகள்

ஜவ்வாது மலையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் புதிய பஸ் நிலையத்தை சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்த போது எடுத்த படம்.

ஜவ்வாதுமலையில் ரூ.30 லட்சத்தில் புதிய பஸ் நிலையம்

Published On 2022-06-07 15:15 IST   |   Update On 2022-06-07 15:15:00 IST
  • சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு
  • மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு

திருவண்ணாமலை:

கலசப்பாக்கம் அடத்த ஜவ்வாதுமலையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில்ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை பெ.சு.தி. சரவணண் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.

ஜவ்வாதுமலையில் வாழும் பழங்குடியின மலைவாழ் மக்கள் ஜமுனாமரத்தூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டி பெ.சு.தி.சரவணன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து திருவண்ணாமலை தொகுதி சி.என்.அண்ணாதுரை எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சமும், கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜமுனாமரத்தூரில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை கலசப்பாக்கம் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. இன்று காலை ஜவ்வாதுமலையில் உள்ள ஜமுனாமரத்தூர் சென்று கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் ஜவ்வாது மலையில் வாழும் பழங்குடியின மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News