நல்லாத்தூர் அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.
நல்லாத்தூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- சிறப்பு யாகம் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வன்னியந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ நல்லாத்தூர் அம்மன் கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் வளர்த்து பூர்ணாஹூதி நடைபெற்றது.
பின்னர் யாக வளர்த்த இடத்தில் இருந்து கலசங்கள் புறப்பாடு மேள தாள வாத்தியங்களுடன் வானவேடிக்கையுடன் பம்பை உடுக்கை அடித்து சாமியாடி சிவாச்சா ரியார்கள் கலசங்களை சுமந்து கோயிலை வலம் வந்து கோவில் கோபுர கலசத்திற்கு உள்ள சிறப்பு பூஜைகள் செய்து மகாதீபாரதனை காட்டி கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
பக்தர்கள் தரிசனம்
வன்னியந் தாங்கல், கிளியாத்தூர் நெடும்பிறை, பெரிய கோயில் வடங்கம்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் மகா கும்பாபிஷேக விழவில் கலந்து கொண்டணர்.