உள்ளூர் செய்திகள்
கண்ணமங்கலம் கீழ்நகர் கிராமத்தில் காளைவிடும் திருவிழா
- 41 காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்நகர் கிராமத்தில் காளைவிடும் திருவிழா நடைபெற்றது.
விழாவில் 150-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. பின்னர் சாலையில் அமைக்கப்பட்ட தடுப்புகள் வழியாக ஓடவிடப்பட்டது. இதில் வேகமாக ஓடி முதலிடம் பெற்ற கீழ் வல்லம் காளைக்கு ரொக்கப் பரிசு ரூ.50 ஆயிரம் உள்பட 41 காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக வாடி வாசல் வழியாக காளைகளை ஊராட்சி மன்ற தலைவர் ராணிதண்டபாணி, முன்னாள் தலைவர் ஏழுமலை ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.
இதில் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.