உள்ளூர் செய்திகள்
ஓட்டலில் விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த காட்சி.
ஓட்டல்களில் விழிப்புணர்வு போஸ்டர்
- உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஒட்டப்பட்டுள்ளது
- உணவு குறைபாடு குறித்து தகவல் தெரிவிக்க வலியுறுத்தல்
கண்ணமங்கலம்:
ஆரணி பகுதியில் சில ஓட்டல்களில் வழங்கப்படும் உணவுகள் குறைபாடுகளை உணவுப் பொருட்கள் பாதுகாப்புத்துறையினர் கண்டறிப்பட்டதால், தற்போது கண்ணமங்கலம் பகுதியில் செயல்படும் ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
அதில்ஓட்டல்களில் வழங்கப்படும் உணவுகள் உரிய முறையில் பாதுகாப்புடனும், பரிமாறும் செய்பவர்கள் உரிய ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளது.
மேலும் பரிமாறும் உணவு வகைகளில் குறைபாடுகளை வாட்ஸ் அப், குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்க செல்போன் எண் (9443042322) இடம் பெற்றுள்ளது. இதனை ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு படித்து செல்கின்றனர்.